My age does not matter to people MP CM retaliates to Amit Shah - தமிழ் News
Tamil Nadu

My age does not matter to people MP CM retaliates to Amit Shah – தமிழ் News

Spread the love


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.

மத்திய பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா மத்திய பிரதேச முதல்வர் மாநில பிரச்சனைகளை  பார்க்காமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள் உங்கள் வயதிற்கு நல்லதில்லை என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கமல்நாத், “எங்கள் அரசின் சிறந்த செயல்பாடுகளை ஒரு வருடத்தில் காட்டியுள்ளோம். 365 நாள்களில் செய்ய வேண்டிய வாக்குறுதிகளை 265 நாள்களில் செய்து முடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை. பல இளம் பா.ஜ.க தலைவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து இந்த வயதிலும் மக்கள் என்னை நம்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *